Mnadu News

கள்ள சந்தையில் போதை புழக்கம்! சென்னையை சேர்ந்த இருவர் அதிரடி கைது!

போதை பொருள் நடமாட்டம்: 

தமிழகம் எங்கும் சமீப காலங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. காவல்துறையின் அதிகாரிகளும் எத்தனையோ விதமான வழிகளில் அவற்றை முடக்க முயன்றாலும் ஆனாலும் ஓயிந்தபாடில்லை. 

சென்னையில் போதை புழக்கம் : 

ஆம், சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் 23 வயதான பாஸ்கர் என்பவர் மீது ஏற்கனவே போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைதானவர். இந்த நபர் மீண்டும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சங்கர் நகர் ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ,பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது தான் அவரது நண்பரான 32 வயதான யோவான் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு போதை வஸ்துக்களை வாங்க ஆந்திரா சென்றுள்ளது தெரியவந்தது. 

கைதான முக்கிய குற்றவாளி: 

 அந்த நபரின் செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் கண்காணித்தனர். போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்குள் யோவான் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி போரூர் ஐயப்பந்தாங்கல் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அவர் வீட்டிற்கு சென்றதும் அங்கு சோதனையிட்டனர். சோதனையில் வீட்டில் 2000 வலி நிவாரணி மாத்திரைகள், சிரஞ்சி, 1.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கிய நிலையில் அவரை கையும் களவுமாகப் கைது செய்தனர். 

சட்டவிரோத விற்பனை: 

மேலும், மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆந்திராவில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Share this post with your friends