தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தனிப்படை உதவியுடன் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிச்செல்வன் ( 28) மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்ச கும்பு மகன் மணிகண்டன் (24 ) தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1,20,000 மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், 2,00,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதேபோல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு பேர் கள்ள நோட்டில் புழக்கத்தில் விட முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்