அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 4-5 இடங்களை மட்டுமே பெறும். குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இம்முறை காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழக்கிறது. பாஜகவின் முக்கிய சவாலா ஆம் ஆத்மி தன்னை முன்னிறுத்தும். ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 178 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முற்றிலும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரஸின் வாக்குகள் 13 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான நேரடிப் போட்டி. காங்கிரஸ{க்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாநிலத்தில் இரண்டு வகையான வாக்காளர்கள் இருப்பதாகக் கூறிய அவர், ஒன்று பாஜகவை வெறுத்தவர், மற்றொருவர் ஆம் ஆத்மியை விரும்புபவர். இந்தமுறை காங்கிரஸின் வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு மாறுவதாக அவர் கூறினார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More