Mnadu News

காங்கிரஸில் சேர்வதை விட கிணற்றில் குதிப்பதே நல்லது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு.

பா.ஜ.க, அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மஹாராஷ்டிர மாநிலம் பாந்தரா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள நிதின் கட்கரி , மறைந்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீPகாந்த் ஜிக்கர் ஒரு முறை என்னிடம் நீங்கள் சிறந்த தலைவர் மற்றும் தொண்டர். காங்கிரசில் இணைந்தால் சிறந்த எதிர்காலம் உள்ளது என்றார்.அதற்கு நான், காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதித்து விடுவேன். பா.ஜ.க, மீதும் அதன் கொள்கை மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அக்கட்சியிலேயே நீடிப்பேன் என பதிலளித்தேன். எனது இளமை காலத்தில் பல நல்ல சிந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு விதைத்துள்ளது.காங்கிரஸ் உருவான பிறகு, அக்கட்சி பலமுறை உடைந்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை நீங்கள் மறந்து விடக்கூடாது. கடந்த காலங்களில் நடந்ததை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கியது. ஆனால், சுயநலத்திற்காக பல கல்வி நிறுவனங்களை அக்கட்சி உருவாக்கியது. இந்தியாவை ‛சூப்பர் பவர்’ நாடாக மாற்றுவதற்கான கொள்கைகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த பணிகளை விட கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க, அரசு இரண்டு மடங்கு அதிக பணிகளை செய்துள்ளது. பேசி உள்ளார்.

Share this post with your friends