கர்நாடகத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஷிங்கோன் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ள பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் என்றாலே லஞ்சம், ஊழல், குற்றச்செயல்கள்தான். அதனால், வளர்ச்சித் திட்டங்களை அளிப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.அதோடு, பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்திலிருந்து கர்நாடக மக்கள் விலகிவிடக்கூடாது.அதே சமயம், வளர்ச்சியை நோக்கிய பந்தயத்திலிருந்தும் கர்நாடகம் விலகிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More