காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்ற 80 வயதான மல்லிகார்ஜுன காhகே புது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கார்கேவிடம் கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி அளித்தார். அதன்பிறகு, கட்சியின் தற்போதைய தலைவர் சோனியா காந்தி, முறைப்படி தலைமைப் பொறுப்பை கார்கேவிடம் ஒப்படைத்தார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபர் கார்கே ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில், தற்போது தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More