காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார. சசி தரூர் இன்று நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார். இந்த நிலையில்,புதிய திருப்பமாக, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், சசி தரூர் இடையே மும்முனை போட்டி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More