பாலஸ்தீனத்தை சேர்ந்த காதர் அட்னான் தனி நாடு கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில்தான் காதர் அட்னானை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது.இந்தசூழலில், சிறையில் இருந்த காதர் அட்னான் கடந்த மூன்று மாதமாக உணவு உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அதோடு, இஸ்ரேல் அரசின் மருத்துவ உதவிகளையும் நிராகரித்தார். இந்த நிலையில் தனது அறையில் காதர் அட்னான் மயங்கி நிலையில் இருந்ததாகவும், அவரை பரிசோதித்ததில் அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. காதர் அட்னானின் மறைவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை ஹமாஸ் அமைப்பின் மீது நடத்தியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More