Mnadu News

காசோலை மோசடி வழக்கு: லிங்குசாமியின் 6 மாத சிறைத் தண்டனை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம்.

காசோலை மோடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை முதன்மை நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் அதை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்கெனவே 20 சதவித தொகையை செலுத்தியுள்ளோம். கூடுதலாக செலுத்தத் தயார் எனத் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தணடனையை நீதிபதி நிறுத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, காசோலை தொகையில் 20 சதவிதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 6 வாரங்கள் அவகாசம் அளிப்பதாகவும் நீதிபதி; தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

Share this post with your friends