Mnadu News

காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு.

மேட்டூர் தொட்டில்பட்டியில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் நீர் சுத்தம் செய்யப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 28 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மேச்சேரி,ஓமலூர், தொப்பூர், தாரமங்கலம், காடையாம்பட்டி பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுகின்றனர். இன்று காலை தொட்டில்பட்டி அருகே காடையாம்பட்டி கூட்டக் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது.
கவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டரை நிறுத்தி குடிநீர் வெளியேறுவதை நிறுத்தினர். பின்னர் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Share this post with your friends