Mnadu News

காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினர்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மருதமலை வனப் பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. அவ்வப்போது யானைகள், குடியிருப்புப் பகுதிக்குள் வருவது வழக்கம். கடந்த வாரங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், இன்று பாரதியார் பல்கலைக்கழக பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வந்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தொடர்ந்து காட்டு யானைகள் அங்கும் இங்குமாக ஓடிச் சென்றதால் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Share this post with your friends