Mnadu News

காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஏழுமலை – செல்வராணி தம்பதியினருக்கு, 2 மகன் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாம்ராஜ் (21) சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் – அஞ்சலை தம்பதியினருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். தம்பதியினரின் மூத்த மகள் ஈஸ்வரி (17), களம்பூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோர் காதலித்து வருகின்றனர்.

இதனையடுத்து ஈஸ்வரியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யபட்டது. இதனால் ஈஸ்வரி சாம்ராஜின் உறவை துண்டித்து பேச்சு வார்த்தை அடியோடு நிறுத்திவிட்டார்.
அதனைத்தொடர்ந்து சாம்ராஜ் அவருடைய நண்பர்கள் முருகேஷ், சந்தோஷ் ஆகியோருடன் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஈஸ்வரி ‘உன்னிடம் பேச விரும்பவில்லை. எனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக’ சாம்ராஜிடம் தெரிவித்ததன் பேரில், சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன் சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தை சாம்ராஜ் தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யகோரி சாம்ராஜ் உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு பின்னர் திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து சென்ற ஆரணி காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் களம்பூர் போலீசார் வெங்கடேசனை கைது செய்ய உறுதியளித்தன் பேரில் சாம்ராஜ் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். மேலும் தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this post with your friends