காதலித்து ‘லிவ் இன்’ உறவுமுறையில் இருந்த வந்த நிலையில் காதலனை நண்பர்கள் மூலம் தீர்த்துக்கட்டிய காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டருக்கு படித்திருந்தார். சென்னையில் டாக்டராக அவர் பணியாற்றினார். பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் வந்திருந்தார். இதற்கிடையில், கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் உள்ள காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் இறந்து விட்டார். இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விகாசை, அவரது காதலி மற்றும் நண்பர்கள் தான் கொலை செய்திருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.