Mnadu News

“காத்தம்மா” பாடலை போட்டு இணையத்தை கதற விட்டுள்ள இசையமைப்பாளர் சாம் சி எஸ்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் எப்போதும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கைதேர்ந்தவர். அம்புலி படத்தில் துவங்கிய இவரின் பயணம் தற்போது வரை சுமார் 10 வருடங்களாக வெற்றியாகவே நகர்ந்து வருகிறது. என்ன தான் இவர் இசையமைத்த பல படங்கள் தோல்வியை தழுவினாலும் இவரின் சோதனை முயற்சிகள் தொடரவே செய்கின்றன.

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிகான் போன்ற பலர் நடிக்கும் படம் தான் “பகாசுரன்”. இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பதிவு செய்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான
“காத்தம்மா” சாம் சி எஸ் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். இப்பாடல் யூடியூப் இல் வெளியான சில நிமிடங்களிலேயே பலரது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

லிங்க் : https://youtu.be/DZqa5KCuBE4

Share this post with your friends