இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்கார், தொடரி, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் மூலம் தனி இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சில படங்கள் வெற்றி, சில படங்கள் தோல்வி என இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டே உள்ளன.

ஜன கண மன, அகிலன், பெயரிடப்படாத படம் ஆகிய படங்களில் ஹீரோயனாக ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என மீண்டும் களத்தில் கீர்த்தி சுரேஷ் பிஸி வலம் வருகிறார்.

சுமார் 9 மாதங்களுக்கு முன்பு “காந்தாரி” என்ற தனி பாடலில் கீர்த்தி சுரேஷ், பிருந்தா மாஸ்டர் நடனத்தில் மிரட்டி இருப்பர். அப்பாடல் நல்ல ரீச் அடைந்தது. தற்போது, தமிழ் மொழியில் இப்பாடல் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
பவன் இசையில், விவேக் வரிகளில், வைஷ் குரலில் இணையத்தை இப்பாடல் கலக்கி வருகிறது. பெண்ணின் பெருமையை புகழ்ந்து பாடும் பாடலாய் இது உள்ளது.

சாங் லிங்க்: https://youtu.be/EHgKXtNRRng