Mnadu News

கான்செர்ட் நிகழ்ச்சிகளிலும் கல்லா காட்டும் ராக் ஸ்டார் அனிருத் !

ஒவ்வொரு கலைஞருக்கும்  ஒவ்வொரு காலகட்டம் அவர்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும். காலம் தான் எல்லவற்றுக்கும் மேலானது. ஆம், எதிர்பார்த்த ஒருவர் வீழ்வதும், எதிர்பாராத ஒருவர் வெல்வதும் காலத்தின் நடனமே. அப்படி 2012 ஆம் ஆண்டு அறிமுகமாகி இன்று பட்டி தொட்டி எங்கும் தமது இசையால் மக்கள் உள்ளங்களில் ஆழ பதிந்துள்ளவர் ராக் ஸ்டார் அனிருத்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், தல அஜீத், ஷாருக்கான், சிவகார்த்திகேயன், சூரியா, தனுஷ், விஜய் சேதுபதி, ஜூனியர் என்டிஆர் என இப்படி எல்லா மொழிகளிலும் எல்லா பக்கங்களிலும் அனிருத் இசை தான் பிரதானமாக ஒலித்து கொண்டிருக்கிறது.

20 நாட்களுக்கு முன்னர் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை அடித்து நொறுக்கி வருகிறது. மேலும், அனிருத் இசை ஒரு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் இதை பல இடங்களில் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இனி அனிருத் காலம் தான் என சொல்லும் அளவுக்கு அவரின் இசையில் வெளியாகும் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஜவான், லியோ, இந்தியன் 2, தலைவர் 170, விடாமுயற்சி, தேவாரா, விஜய் தேவரக்கொண்டா படம் (இரண்டும் தெலுங்கு படங்கள்) என இப்படி ஏழு படங்கள் வெளியாக தயாராக உள்ளது. இதை தவிர விக்ரம் 3, கைதி 2, லியோ பார்ட் 2, தலைவர் 171 என இவை அனைத்தும் பேச்சுவார்த்தையில் உள்ளன.

பரபரப்பாக படங்கலலுக்கு இசையமைப்பது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் இசை கச்சேரிகளை நடத்தி அதிலும் பெரும் தொகையை ஈட்டி வருகிறார் நமது ராக் ஸ்டார் அனிருத். ஆம், ஒரு இசை நிகழ்ச்சிக்கு சுமார் 5 கோடிகளை வாங்குகிறாராம்.

அதே போல திரைபடங்களுக்கு இசையமைக்க 5 முதல் 8 கோடிகள் வரை வாங்குகிறாராம். ஆனாலும், தெரிந்த நண்பர்களுக்காக அல்லது இசையமைப்பாளர்கள் பாட அழைத்தால் அதற்கு தொகை வாங்காமல் பாடுவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எது எப்படியோ அனிருத் எதை தொட்டாலும் ஜெயம் தான் என சொல்லும் வகையில் அவரின் வளர்ச்சி விண்ணை தொட்டுள்ளது. 

Share this post with your friends