Mnadu News

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends