முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கொள்கை வழிகாட்டுதலை வழங்குவதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்க தேவiயான வழி முறைகளை வழங்கும். இக்குழுவின் உறுப்பினர்களாக பொருளாதார நிபுணர் மாண்டெக் சிங் அலுவாலியா, ஆதார் ஆணைய முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி , ஐ.நா. சுற்றுச்சூழல் செயல் இயக்குநரான நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவை தலைவர் நிர்மலா ராஜா ,தமிழக அரசின் மூத்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
.