சென்னையில் 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை உயிர் இழப்பு அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்தாட்ட பயிற்சியின்போது ஏற்பட்ட தசை பிரச்சனையால் மாணவி பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இரண்டு மருத்துவர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியின் இறப்பு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தமிழக விளையாட்டு வீரர்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. மாணவியின் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.