சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். அவரது 17 வயது மகள் பிரியா சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். அதோடு, கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்
இந்நிலையில், மூட்டு வலி காரணமாக, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன் பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.
இதற்கிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
பிரியா மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மூட்டு அறுவை சிகிச்சை நடந்த போது போடப்பட்ட கட்டு காரணமாக பிரியாவின் உடலில் ரத்த ஓட்டம் தடைபட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக 10 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More