கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த ஆவத்துப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் தாய்வானை சேர்ந்த சியாங் ஷியா ஜங் என்பவரும் ராஜேந்திரனும் ஜப்பானில் காதலித்து வந்த நிலையில் இருவரின் வீட்டின் சம்மதத்தோடு காவேரிப்பட்டிணத்தில் அமைந்துள்ள கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் தாய்வானில் இருந்து மணமகளின் உறவினர்கள், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை , புடவை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.