ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதம் இருந்த இரு விமானிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். கடந்த மார்ச் மாதத்தில் இரு விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாக கடற்படை மற்றும் விமானப்படை இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. ராணுவத்திலும், கடந்த இரு மாதங்களாக இந்த துருவ் வகை ஹெலிகாப்டர்கள் பறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன. தீவிர சோதனை, பராமரிப்புக்கு பிறகு தற்போது மீண்டும் பறந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த ஹெலிகாப்டர்களை தரையிறக்கிய ராணுவம், அதன் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More