Mnadu News

காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை: பூஞ்சில் பெண் கைது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஆண்டு பயங்கரவாத சதி செயல்கள் மற்றும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் சதி திட்டம் தீட்டி ஈடுபடுகின்றனர் என உளவு தகவல் வெளிவந்தது. இந்த தகவல் கிடைத்ததும் கடந்த ஆண்டே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இதுபற்றி ஒரு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு பற்றி விசாரிக்க காஷ்மீரில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ.வின் பல்வேறு குழுக்களும் தனித்தனியாக பிரிந்து சென்று, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் தரைநிலை பணியாளர்களின் இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அவர்களுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொண்ட நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கானேட்டரில் வசிக்கும் ஷனாஸ் அகாதர் என்ற பெண்ணை என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More