சந்தானம் கதா நாயகனாக கடந்த எட்டு வருடங்களாக நடித்து வருகிறார். ஹீரோவாக தான் தேர்வு செய்யும் படங்கள் நன்றாக ஓடவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்களை அவர் கொடுத்து வருகிறார்.
நடிப்பு, தயாரிப்பு என இரட்டை குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்து வந்த அவர் தற்போது, “கிக்” படத்தின் மூலம் பாடகராக அறிமுகம் ஆகியுள்ளார். பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தான்யா, ராகினி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். அர்ஜுன் ஜன்யா இசையில் விவேகா வரிகளில் “Saturday இஸ் கமிங்” நேற்று வெளியாகி யூடியூப் ஐ கலக்கி வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
சாங் லிங்க் : https://youtu.be/yfC6Mz05AAU