Mnadu News

கிராமத்திற்கும் நகரத்திற்கும் வேறுபாடு இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளோம்: பிரதமர் பெருமிதம்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி, காந்தியின் முக்கிய குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான்.
கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின்சக்தி பயன்பாடு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Share this post with your friends