Mnadu News

கிராமத்தில் முகாமிட்ட மூன்று காட்டு யானைகள்

*கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் முகாமிட்ட மூன்று காட்டு யானைகள்

*பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் வனத்துறையினர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் கடந்த ஒரு வாரமாக அங்கிருந்து வெளியேறி துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக இன்று கிருஷ்ணகிரி அருகில் உள்ள சின்ன சோக்காடி கிராமத்தில் விளை நிலத்தில் முகாமிட்டு அப்பகுதியில் இருந்த வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். யானைகளை மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்குள் விரட்டும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி உத்தரவின்படி தர்மபுரி வன பாதுகாவலர் பெரியசாமியின் தலைமையில், வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, வனக்காப்பாளர் குட்டுகான், வனவர் சரவணன், வனக்காப்பாளர்கள் கார்த்திக், முனிராஜ், வனக்காவலர் முருகேசன் மற்றும் யானை தடுப்பு காவலர்கள், ஒன்றாக இனைந்து பட்டாசுகள் வெடித்தும் தப்பட்டை ஒலி எழுப்பியும் மூன்று யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share this post with your friends