Mnadu News

கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக செயல்பட்டு வரும் 80 கடைகளை தற்காலிகமாக வடசன்னதி ஒத்தவாடை தெருவில் அமைக்க வலியுறுத்தினார். தொடர்ந்து ராஜகோபுரம் முன்பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சாலையோர வியாபாரிகளுக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அந்த இடத்தை முழுவதுமாக பேவர் பிளாக் அமைத்து எஞ்சியுள்ள இடத்தில் கார் பார்க்கிங் ஏற்படுத்துதல், இருபுறமும் தற்காலிக கடைகள் அமைத்து தர இடம் தேர்வு செய்து இப்பணிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More