கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு..
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் பணியாளர்கள் சிரமம்..
கிருஷ்ணகிரி;
தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை ரோடு, பழையபேட்டை, புதுப்பேட்டை பெங்களூர் ரோடு மற்றும் சுற்றுப்புறங்களான கட்டிகானப்பள்ளி, வெங்கட்டபுரம் போன்ற இடங்களில் மிதமான தொடர்மழை பெய்து வந்தது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பணிக்குச் செல்லும் பெண்கள் இளைஞர்கள் மழையில் நனைந்தபடியே மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் பொதுமக்கள் மழையால் தங்கள் வீடுகளில் இருந்த நிலையில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் மழையின் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.