போச்சம்பள்ளி தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் பயிர் சாகுபடிகள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெப்பாளம்பட்டி பஞ்சாயத்து தொப்படிகுப்பம் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் பயிர் சாகுபடிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்ட அலுவலர் கிருஷ்ணன் பேசுகையில் உணவு பாதுகாப்பு இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், நுண்ணீர் பாசனம், மரக்கன்றுகள் வினியோகம் இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற தாங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு அட்டை உடன் அருகில் உள்ள கணினி மையம் அல்லது தபால் நிலையத்திற்கு சென்று ஆதார் அட்டை இணைக்குமாறும், தங்கள் நிலத்தின் பட்டா சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அணுகி புதுப்பிக்குமாறும் வேளாண் துறை மூலம் கேட்டுக்கொண்டார். இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.