தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ) அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காந்தி சிலை பகுதியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் என் ஐ ஏ சோதனைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஓசூர் நகர போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது