கிழக்கு ஸ்பெயின் நாட்டில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடே கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் கிழக்கு ஸ்பெயினில் கனமழை பெய்து வருவது இரண்டாவது முறையாகும்.
இதனால், தெருக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் மழை நீரில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. அதோடு, வாலன்சியா விமான நிலையத்தில் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதாக புறப்பட்டன. அதே போல அங்குள்ள அல்டாயா நகரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அங்கு மறு அறிவிப்பு வரும் வரை ஓடுபாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணிகளை மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.