Mnadu News

கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.

கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாரானது. இந்த அரங்கத்தை 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தை அமைச்சர் மூர்த்தி இன்று ஆய்வு செய்தார். 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More