அமுல் நிறுவனத்தின் அதிக கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் பாக்கெட்டுகள் விலை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு குஜராத் மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ,இந்த விலை உயர்வையடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு 61 ரூபாயிலிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இதே அமுல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமும் தனது பால் பாக்கெட்டுகளுக்கு தலா 2 ரூபாய் அதிகரித்திருந்தது. இந்த விலை உயர்வானது, அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகரித்திருப்பதை ஈடு செய்யும் வகையில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More