Mnadu News

குஜராத் முதல்கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. இத்தொகுதிகள் சௌராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியவை.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில், ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதுவரவான ஆம் ஆத்மி ஆகியவற்றின் வேட்பாளர்கள், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 788 பேர் களத்தில் உள்ளனர்.
அதேசமயம் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 88 இடங்களில் ஆம் ஆத்மி களத்தில் உள்ளது. பாஜகவும் காங்கிரஸ{ம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியின்றன. இந்த நிலையில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதன் காரணமாக அரசியல் தலைவர்கள் பலர் அத்தொகுதிகளில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபடுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-இல் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக, ஏழாவது முறையாக வாகைசூடும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

Share this post with your friends