சென்னை மாநகராட்சி மான்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில்நடைபெற்றது. இதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் முக்கியமாக, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் சிலை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அவரது சிலை நிறுவ தடையின்மைச் சான்று வழங்கபட்டதற்கு அனுமதி. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 53 இடங்களில் செயல்பட்ட அம்மா குடிநீர் நிலையங்களை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் அளிக்க அனுமதி.சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையத்தை வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்றும் திட்டத்தை 300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற ஒப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More