Mnadu News

குடியரசுத் தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார்

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ_க்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன. சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ் கலைஞர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More