பீகார் சட்டப்பேரவையில் உரையாற்றிய மாநில முதல் அமைச்சர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால், இழப்பீடு வழங்க முடியாது. நாங்கள் சொல்வது என்னவென்றால், குடித்தால் செத்துப்போவீர்கள். குடிப்பதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் சப்ரா கள்ளச்சாராய சம்பவம் பேசிய நிதீஷ் குமார், கள்ளச்சாராயம் குடிக்கும் எவர் ஒருவரும் செத்துப்போவார்கள் என்று காட்டமாகக் கூறினார்.
பீகாரில் மதுவுக்கு தடை விதித்திருப்பதற்கு ஆதரவாக பேசியிருக்கும் நிதீஷ் குமார், மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர். பலர் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனர் என்றார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More