Mnadu News

குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்..!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் முத்துக்குமரன். இவர் சங்கீதா என்ற பெண்ணை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் முத்துகுமரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் சங்கீதாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த போது பின்னால் வந்த அவரது கணவர் தீ பற்ற வைத்து சங்கீதா மீது வீசியுள்ளார். தீயினால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் அளித்த மரண வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends