நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ரமேஷ் அரவிந்த் தனது காரில் கோவையிலிருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது குன்னூர் காந்திபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் அறிந்த குன்னூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மற்றும் ஹில் காப் காவலர்கள் நிகழ்விடத்திற்கு சென்று காயமடைந்த ரஞ்சித்தை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ரஞ்சித்தை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து குன்னூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.