Mnadu News

குமரியில் சாரல் மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு .

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் அடையா மடை பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், தக்கலை, இரணியல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends