Mnadu News

குற்றங்கள் குறைய என்கவுன்ட்டர்கள்தான் காரணம்: யோகி ஆதித்யநாத் பேச்சு.

யோகி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரத்து 713 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாகவும் அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சி அடக்கப்பட்டுள்ளது.அதோடு, இந்த என்கவுன்ட்டர் காரணமாகதான் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது. அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநிலம் நவீனமயப்படுத்தப்ப ட்டிருக்கிறது. இதற்கு இடையூராக உள்ளவர்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்ககப்பட்டு வருகிறது. மாநிலம் தற்போது 1 டிரில்லியன் அதாவது 7 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends