தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதே போல மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் பிரதான அருவியில் நேற்று இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்து வரத்து சீராகியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.