திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக், நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசும் ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்கள் பெண்களை தவறாக வசைபாடும்போது, அது அந்த ஆண்களின் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், தாங்கள் கருணாநிதியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் முதல் அமைச்சா ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடலா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்து குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது பதிவில், ”ஒரு பெண்ணாகவும், ஒரு மனுஷியாகவும் திமுக நிர்வாகி சைதை சாதிக் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், எந்த இடத்தில் சொன்னாலும் எந்த கட்சியைச் சேர்ந்தவரானாலும் இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. திமுக தலைவரும் கட்சியும் இதை மன்னிக்காததால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
கனிமொழியின் மன்னிப்புக்குப் பதில் அளித்துள்ள குஷ்பு, மிக்க நன்றி கனிமொழி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் எப்போதும் பெண்களின் கண்ணியம், சுயமரியாதைக்காக எப்போதும் துணைநிற்கும் ஒருவராக இருக்கிறீர்கள். பணிகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More