Mnadu News

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More