திருவாரூர்;
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டில் உள்ள வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் மனைவி மகேஷ்வரி. இந்த நிலையில் மகேஷ்வரி தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 11 ஆயிரம் பணத்தை காசாளரிடம் வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். பிறகு அந்த பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் 22,000 பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றதாக அச்சிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தனது பகுதி வார்டு கவுன்சிலர் ரஜினி சின்னாவுடன் வங்கிக்கு சென்று நடந்ததை விளக்கி பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மகேஸ்வரியின் நேர்மையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.