கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது,இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது,இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது மாணவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More