20 வருடங்களாக திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிக்க நடிகர் ஆர்யா முயன்று வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தான் அவருக்கென்று நல்ல கதைகள் அமைந்து வருகிறது. அப்படி, “சார்பட்டா பரம்பரை, டெடி” படங்களின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்த ஆர்யா, தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் உடன் ஆர்யா இணைந்துள்ள இரண்டாவது படம் தான் “கேப்டன்”. இதன் முதல் பார்வை, பாடல்கள் டிரெய்லர் என அனைத்தும் பெரும் கவனம் ஈர்த்தது.
இந்த படத்தில் ஆர்யா இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் டி இமான் நான்காவது முறையாக சக்தி சௌந்தர்ராஜன் உடன் இணைந்து உள்ளார். ஐஷ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், ராஜ் பரத் என பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இப்படத்தின் “கைலா” வீடியோ பாடல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
பாடல் லிங்க் :
https://youtu.be/o_wUgUJ8iWU