மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் சுமார் 70 கோடிகள் வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஆனால், அண்மையில் வெளியான “நானே வருவேன்” திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை அடையவில்லை. இதனால், தயாரிப்பாளர் தாணு கடும் மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் தாணு தமது அடுத்த படத்தை நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற இருந்த சூழலில் தனுஷ் தமது சம்பளத்தை 30 இல் இருந்து 40 கோடிகள் வரை உயர்த்தி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், தாணு உட்பட பல தயாரிப்பாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளதாக தெரிகிறது. ஆனாலும், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் “கேப்டன் மில்லர்” திரைபடம் படம் வெளியாவதற்கு முன்னரே 80 கோடிகள் வரை வியாபாரம் ஆகியுள்ள தகவல் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.