Mnadu News

“கேப்டன் மில்லர்” படக்குழு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்”. வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்த படம் மூன்று  பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.

சமீபத்தில் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

அந்த வகையில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 28 நள்ளிரவு 12.01-க்கு “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends