Mnadu News

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் அச்சம்!

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதத்தில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில மருத்துவர் சன்னி அறிவுறுத்தியுள்ளார்.

Share this post with your friends